முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
தரவுத்தாள்கள்
மதிப்புக் கூட்டு பாடங்கள்
சின்ன சின்ன செய்திகள்
தொடர்புக்கு

Science Direct

Advertisements:
ஒன்றைப்பற்றிய அச்சத்தினால் ஏற்படும் அச்ச நோய் பல வகைப்படும். ஒன்றின்மீதான கடும் அச்சம், அல்லது விருப்பமின்மை, அல்லது வெறுப்பு,போபியா(phobia) எனப்படுகிறது. ஒருவர் மீது, அல்லது ஒரு சூழல் பற்றி,அல்லது ஓர் அமைப்பு மீது, அல்லது அமைப்பினர், நாட்டினர், அவர்கள்தொடர்பானவை என்பனவற்றின் மீது, அல்லது இவை போன்றவற்றின்மீது, எவ்வகைப் பேரிடருக்கும் வாய்ப்பு இல்லாத பொழுதும் விடாப்பிடியானஅல்லது இயல்பிற்கு மீறிய அல்லது பகுத்தறிவிற்கு முரணான அச்சம் ஏற்படுவதையே இது குறிக்கின்றது.
     
உயிர்மி (உயிரணு)

Cell (Biology)


- இலக்குவனார் திருவள்ளுவன்

ஆகத்து 28, 2012 12:44 இந்தியத் திட்ட நேரம்

நம் உடலில் அமைந்துள்ள கோடிக்கணக்கான நுண்ணறை ஒவ்வொன்றும் உயிர்மி எனப்படும். ஒரே வகையான செயல்திறன் கொண்ட உயிர்மிகளின் இணைப்பானது மெய்ம்மி(திசு) எனப்படும். பலவகைத் மெய்ம்மிகள் வேறுபட்ட விகிதங்களில் இணைந்து உருவாவது உறுப்பு. உறுப்புகள் சேர்ந்து அமைந்தது உடல்.

செங்கற்களை அடிப்படையாகக் கொண்டு கட்டடம் எழுப்பப்படுகிறது; அதே போல் உயிர்மியை அடிப்படையாகக் கொண்டு உடல் கட்டுமானம் அமைந்துள்ளது. குருதி உயிர்மி, நரம்புஉயிர்மி,தசைஇழை உயிர்மி என 200 வகைப்பட்ட உயிர்மிகள் உள்ளன. இவை வடிவிலும் அளவிலும் மாறுபட்டன; என்ற போதும் திறன் மிகுந்த நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கத் தக்கன. 10,000கோடிக்கு மேற்பட்ட உயிர்மிகள் உடலில் உள்ளன.

நுண்ணறை, உயிரணு, ‘செல்’ என்றெல்லாம் பலரால் அழைக்கப்படுவதும் இதுவே. ஆனால் இச் சொற்களுக்கு வேறு பொருள்களும் உள்ளமையால் உயிர்ப்பிற்கு அடிப்படையான இதனை உயிர்மி என்பது சாலப் பொருத்தமாக அமையும். எனவே வெள்ளணு, சிவப்பணு என்பனவற்றை நாம் வெள்ளுயிர்மி, செவ்வுயிர்மி என்று சொல்லலாம்.

பழந்தமிழில் செந்து என உயிரணு எனப்படும் உயிர்மியைக் குறித்துள்ளனர். இதனைப் பிங்கல நிகண்டு(பா 3561 ) மூலம்அறியலாம். ஆனால், இச்சொல் வழக்கொழிந்து விட்டது. இச்சொல்லை மீண்டும் பயன்படுத்தலாம்

உயிர்மியை இணைக்கும் இடைப்பட்ட உயிரற்ற பொருள் உயிர்ம இடைமை எனப்பெறும்.

உயிர்ம பிணைப்புப் பொருளின் நிலை:

1. பாகு,
2. நார்,
3. நீர்மம்,
4. மாவு,
5. பசைமம்

உயிர்மி பற்றி அறிய வேண்டிய அடிப்படைத் தகவல்கள் வருமாறு

1. நமது உடல் கோடிக்கணக்கான உயிர்மிகளால் (அணுக்களால்) உருவானது.

2. உயிர்மியின் நடுவில் உட்கருவும் அதனைச்சுற்றி ஊன்மமும் உள்ளன.

3. உயிர்மி மெல்லிய சவ்வினால் மூடப்பட்டிருக்கும்.

4. குருதத்தில் உள்ள உயிர்மிகள், செவ்வுயிர்மி (செவ்வணு), வௌ்ளுயிர்மி (வௌ்ளணு) ஆகியன.

5. உயிர்வளியைக் கொண்டு செல்லவும் கரி வளியை வெளியேற்றவும் உதவுவது செவ்வுயிர்மி.


(Antibacterial agent can weaken muscle - A germ-fighting chemical added to many soaps, toothpastes and fabrics can interfere with how muscles contract, new research shows. - sciencenews.org)

ஒரு புதிய ஆய்வானது, பெரும் சவுக்காரங்கள், பற்பசைகள், துணிக்களில் சேர்க்கப்பட்டுள்ள கிருமி தாக்கு பொருளானது தசைகள் சுருங்கக் காரணமாகிறது எனக் கூறுகிறது.அசாதாரண தீநுண்மம் பாம்புகளை முடிச்சுகளாக கட்டலாம்

புதிதாக கண்டறிந்த ஒரு வகுப்பு தீநுண்மமானது பாம்புகளை அதன் உணவை திரும்ப வரும்படி செய்யவும், அதனை உணவருந்தாமலும், அதன் உடலை முடிச்சாக கட்டவும் செய்கிறது என கண்டறிந்துள்ளனர். வாழை நாரில் நெசவு நூல் தயாரித்துள்ள ஒரு இந்தியர்

வாழை நாரை நெசவு நூலாகவும், அந்நூல்களைக் கொண்டு புடவைகளையும் நெய்துள்ளார் சென்னையைச் சேர்ந்த சேகர் என்பவர். செவ்வாய் ஆய்வுக்களத்தின் முதல் இலக்கை நாசா தீர்மானித்துள்ளது

கிலிநெல்க் என்று பெயரிடப்பட்டுள்ள மூன்று வகையான இயற்கை குறுக்குவெட்டு நிலப்பகுதியான இந்த இலக்குப் பகுதியையே முதல் இயக்கமாக நாசா குழுமம் முடிவு செய்துள்ளது. காற்றாலையில் ஆள் கோபுரங்கள் தான் செயல்திறன் மிக்கதாக இருக்கிறது

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பொறியாளர்களின் ஆய்வு கடல் காற்று விசையாழிகளே ஆற்றல் வழங்கும் வகையில் 100 விழுக்காடு சிறப்பாக இருக்க முடியும் என்கிறது.