விண்வெளியில் தென்பட்ட ஒளியில் வெற்றிடத்தின் துளிம விளைவு

இராஜ்குமார்
Sat Dec 10 2016 15:37:22 GMT-0000 (GMT)

தற்போது வானியலாளர்கள் கண்டறியப்பட்ட ஒரு விண்மீன் வெடிப்பால் ஏற்பட்ட ஒளிச் சிதறலில் துளிம விளைவினை கண்டுள்ளனர். நியூட்டிரான் விண்மீனின் கண்காணிப்புகளின் போது ஏற்பட்ட பேரொளிச் சிதறலை அறிஞர்கள் பகுப்பாய்வு செய்தபின் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இவ்வாறு விவரித்துள்ளனர்.


இந்த ஒளியில் ஏற்பட்ட துளிம விளைவு, சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு விவரிக்கப்பட்ட ஒரு வெற்றிடத்தில் மிக கடினமான காந்தப் புலத்தில் சென்ற ஒளியினால் ஏற்பட்ட துளிம விளைவுடன் ஒப்பிடமுடிகிறது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.

சுமார் 400 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நியூட்டிரான் விண்மீனின் மீது, நீரில் ஒளி எதிரொளிப்பதைப் போன்று, மின்காந்த அலைகளால் ஒளியானது ஒரு குறிப்பிட்ட திசையில் முனைவாக்கமடைந்ததை கண்காணித்த ஆய்வாளர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் இதனை விவரித்தனர்.

மேற்கோள்கள்: