புற்றுநோய் பரவுதலை தடுக்கும் ஒரு புதிய செயல்முறை

இராஜ்குமார்
Sat Dec 10 2016 08:59:55 GMT-0000 (GMT)

உயிர்மிகள் (cells) தன்னை தானே மரணித்தாலும், முழுமையாக இறக்காமல் பகுதியளவு அது உயிர்த்து இருக்கின்றன. இவ்வாறு முற்றும் இறக்கும் நிலையில் உள்ள உயிர்மிகளை மீளுர்ப்பு செய்யும் வகையில் ஒரு புதிய செயல்முறை உருவாக்க முடிகிறது என டிசம்பர் 6 அன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு பரிந்துரைக்கிறது.இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உயிர்மிகளை மேலும் பரவாமலும், அந்த உயிர்மிகளுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டவும் முடிகிற ஒரு செயல்முறையை எடுத்துரைக்கின்றார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உயிர்மி உயிரியலாளர் டினைஸ் மாண்டெல்

டினைஸ் மாண்டெல், அண்மையில் கண்டறியப்பட்ட அனஸ்டாசிஸ் (anastasis) என்னும் இந்தச் செயல்முறையை அமெரிக்கன் சொசைட்டி பார்  செல் பயாலஜியின் முழு ஆண்டு சந்திப்பில் இதனை விவரித்தார். 

உயிர்மி இறப்பு (apoptosis) என்பது உயிர்மிகள் தானே இறக்க முற்படும் நிலையைக் குறிக்கிறது. உயிர்மி மீளுயிர்ப்பு (anastasis) என்பது உயிர்மிகள் முற்றும் இறந்து அழியும் நிலையில் இருந்து மீட்டு அதற்கு உயிர் கொடுக்கும் ஒரு செயல்முறையாகும். இந்த செயல்முறையானது புற்றுநோய் பரவுதலைத் தடுக்கும் முறையினில் பெரும்பங்கு வகிக்கிறது ஏனெனில் உயிர்மி மீளுயிர்ப்பின் மூலம் புற்றுநோயினால் பாதிக்கப்படும் உயிர்மிகளை மீட்டு அந்த நோய் பாதிக்காத வண்ணம் மீண்டும் அந்த உயிர்மிகளுக்கு உயிரூட்ட முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இண்டியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியலாளர் கிலார் வாக்சாக் (Claire Walczak) முன்பு உயிர்மிகள் காஸ்பாசு (caspase) என்னும் மரணிப்பு மூலக்கூறினால் தூண்டப்பட்டு உயிர்மி இறப்பை முன்னெடுக்கும் பொழுது உயிர்மிகள் முழுமையாக இறந்து விடும் என நம்பினர். பின் 2008 ஆம் ஆண்டு உயிர்மி உயிரியலாளர் ஹோ லாம் தாங் (Ho Lam Tang) என்பவர் இந்த உயிர்மிகள் காஸ்பாசு என்னும் மரணிப்பு மூலக்கூறு தூண்டப்பட்டாலும் உயிர்மிகள் சிலநேரம் முழுதும் இறப்பதில்லை என்பதைக் கண்டறிந்தார். தற்போது இதற்கு தாங் உயிர்மி மீளுர்ப்பு என்று பெயரிட்டுள்ளார்.

பொதுவாக புற்றுநோயை, வேதிச்சிகிச்சை அல்லது கிமோதெராப்பி மூலம் சிகிச்சை செய்வர். வேதிப்பொருட்கள் மூலமாக நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சை பொதுவாக வேதிச்சிகிச்சை எனப்படுகிறது. நுண்-உயிர்கள் அல்லது புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு இச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பிரபலமான பயன்பாட்டில், இது புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அல்லது செல்நச்சிய தரப்படுத்தப்பட்ட சிகிச்சைக்குரிய முறையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் சேர்க்கைக்கான ஆண்டிநியோபிளாஸ்டிக் மருந்துகளைக் குறிப்பிடுகிறது.

இதனைப் போன்றே முற்றும் இறக்காமல் இருக்கும் உயிர்மிகளுக்கு வேதிச்சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகளைக் கொண்டு மீளுயிர்ப்பு கொடுக்கப்படுவதை செய்து காட்டியுள்ளனர். அவ்வாறு இந்த முறையின் போது வேதிச்சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டியிருக்கும் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.