99 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் வால்

இராஜ்குமார்
Sat Dec 10 2016 01:12:11 GMT-0000 (GMT)

99 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு தங்க நிமிளை (amber) கற்பகுதியில் புதைப்படிமமாய் அமைந்திருக்கும் டைனோசரின் வால் பகுதியைத் தொல்லுயிரியலாளர்கள் (paleontologists) கண்டறிந்துள்ளனர்.


இதைப் பற்றிய ஆய்வு வெளியீட்டினை "கரண்ட் பயாலஜி" என்னும் ஆய்விதழில் டிசம்பர் 8, 2016 அன்று அறிஞர்கள் வெளியிட்டுள்ளனர். மேலுள்ள புகைப்படம் தங்கப் புதைப்படுமத்தில் கிடைக்கப்பெற்ற ஒரு டைனோசரின் தோகை அல்லது வால் பகுதியினைக் காட்டுகிறது. இது சுமார் 37 மில்லிமீட்டர் நீளமுள்ள மிகவும் சிறிய படிமம் ஆகும்.

இந்த ஆய்வை மேற்கொண்டவர் புவியறிவியல் சீனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லிடா ஜிங் என்பவராவார். 

மேற்கோள்கள் :