அணு அளவுடைய சுரங்கங்களுடன் கொண்ட மேம்பட்ட மின்கலனுக்கான ஆய்வு

இராஜ்குமார்
Fri Dec 09 2016 15:01:35 GMT-0000 (GMT)

மாங்கனீசு டை ஆக்சைடு (manganese dioxide), தன்னுள் மின்னூட்ட ஏந்திகளை (charge carrier) எளிதாக உள்ளும் புறமும் நகர்த்தக்கூடிய, ஒழுங்காக இடம்விட்டு அமைக்கப்பட்ட சுரங்கங்கள் கொண்ட ஒரு அணிக்கோவை கட்டமைப்பு (lattice structure) ஆகும்.

ஆய்வாளர்கள் இதற்காக அணுவின் அளவு படிமத் தெளிவை அளிக்கக்கூடிய ஒரு சிறப்பு தொலைநோக்கியினை (Microscope) வடிவமைத்துள்ளனர். இந்தத் தொலைநோக்கியின் உதவியுடன் சில பெரிய அயனிகள் சுரங்கங்களை திறக்கச்செய்து மின்னூட்ட அயனிகளை அதன் வழியாக நகர்த்த முடிவதாக செய்கின்றன என்பதை விளக்குகின்றனர்.


ஆகையால், இத்தகைய புதிய அறிவு உத்தியை பயன்படுத்தி அறிஞர்கள் தேர்ந்த மின்கலன்களை உருவாக்க முயல்கின்றனர் என நேச்சர் கம்யூனிக்கேசன்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.