கரும்பொருள் முன்பு கணித்ததை விட மென்மையானதாக இருக்கலாம்

இராஜ்குமார்
Fri Dec 09 2016 02:16:38 GMT-0000 (GMT)

புதிய பால்வெளியைப் பற்றிய பகுப்பாய்வின் பொழுது, அறிவியலாளர்கள் முன்பு கணித்ததை விடவும் கரும் பொருள் குறைந்த அடர்த்தியாக இருக்கும் என கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

Credit: Kilo-Degree Survey Collaboration/H. Hildebrandt & B. Giblin/ESO

ஒரு ஆய்வுக்குழு கிலோ டிகிரி கருத்துக்கணிப்பு Kilo Degree Survey (KiDS) தரவுகளின் உதவியால் 15 மில்லியன் பால்வெளி தொலைவில் இருந்து கடக்கும் ஒரு ஒளி எவ்வாறு ஈர்ப்பு விசையினால் மாற்றமடைகிறது என பகுப்பாய்வுக்கு உட்பபடுத்தினர். அப்பொழுது கரும்பொருளானது நாம் முன்பு நினைத்ததை விட மிகவும் குறைவான அடர்த்தியுடனேயே இருத்ந்திருக்கக் கூடும் என்பதை கண்டறிந்துள்ளனர்.