பூமியின் வாயுமண்டலத்தில் வெப்ப ஐதரசன் அணுக்கள் கண்டுபிடிப்பு

இராஜ்குமார்
Fri Dec 09 2016 01:25:20 GMT-0000 (GMT)

பூமியின் வாயுமண்டலத்தில் மேலடுக்கான வெப்பவளிமண்டலத்தில் வெப்ப ஐதரசன் அணுக்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, பிற வளிமண்டல கூட்டுப்பொருட்களுடன் ஐதரசனின் (எச்) தற்போதைய தொடர்புகள் மற்றும் பகிர்மான அறிவை வெகுவாக மாற்றக்கூடியதாகும்.


ஐதரசன் அணுக்கள் மிகவும் மெலிந்தவையாக இருப்பதினால், அவை பூமியின் ஈர்ப்பு விசையினை எதிர்த்து மேற்பகுதியில் வீற்றிருக்கவும், கிரகங்களுக்கு இடைப்பட்ட வெளியில் நிரந்தரமாக ஓடிவிடவும் கூடியனவாக உள்ளது. பூமியின் உடனுள்ள செவ்வாய் கிரகம் ஏன் பெரும்பான்மையான நீர் ஆதாரங்களை இழந்தன என்பதை இந்த ஆய்வு முடிவு விளக்குகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.