இந்திய அறிவியலாளர்கள் கண்டுபிடித்த பயன்கொடுக்கும் புதிய வேதிக் கலவை

இராஜ்குமார்
Thu Dec 15 2016 21:14:40 GMT-0000 (GMT)
    ந்தியாவில், ஹைதராபாத்தில் உள்ள டிசிஐஎஸ் மற்றும் காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதி ஆய்வு நிலையம் ஆகியவற்றின் அறிவியலாளர்கள் இணைந்து வேறொரு வேதிமத்தைச் சேர்க்கும் பொழுது அது நீர் எதிர்ப்பும், எண்ணெய் எதிர்ப்பும் கொண்டுள்ளதாய் அமையக்கூடிய ஒரு வேதிப்பொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.

இது மகிழுந்து காற்றுக் கேடயங்கள் (car wind shields), அறுவைசார் உட்பொருத்திகள் (surgical implants), மற்றும் பிற கருவிகளான மருத்துவ உதவுப் பொருட்கள் போன்று பல தயாரிப்புகளுக்கும் பயனுள்ள பொருளாக அமையக்கூடியதாகும். இந்த வேதிப்பொருளானது, அதன் நீர் பறப்பு தொடுகோணம் 170 பாகையை விட அதிகமுள்ள ஒரு மிகை நீர்வெறுப்புள்ளவையாகும் (superhydrophobic).