தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதியைக் கடந்த 'வர்தா' புயல்

இராஜ்குமார்
Mon Dec 12 2016 18:07:50 GMT-0000 (GMT)

டிசம்பர் 12, 2016 அன்று தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதியை 'வர்தா' எனப் பெயரிடப்பட்ட புயல் கடந்து சென்றது. இது தமிழ்நாடு மாநில தலைநகரான சென்னையை அதிகாலை முதலே பலத்தக் காற்றுடன் பெரிதாகப் பாதித்துள்ளது.

இது கடந்த 24 ஆண்டுகளில் காணாத பெரும் புயல் என கருதப்படுகிறது.

கோப்புப் படம்: இன்சாட் 3டி விண்கலம் எடுத்த படம்.

சுமார் 140 கிலோ/மணி வேகம் கொண்டு சென்னைக் கடற்கரையைக் கடந்த இப்புயல் பலத்த மழையையும், நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள், தொழிற்கூடங்கள் மற்றும் சென்னை விமான நிலையம் போன்றவை முழுதும் மூடப்பட்டுவிட்டது. தொடரிச் (train) சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடு, மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்களை கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இராணுவம், தேசிய பேரிடர் நிவாரணப் படை மற்றும் இரு கப்பற்படையின் கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன.

டிசம்பர் 14, 2016 புதன்கிழமை வரை சென்னையில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாதிப்புகள்:
  • சென்னை மாநகரத்தின் தாழ்வானப் பகுதியைச் சேர்ந்த 15000 மக்களை தமிழ் நாடு மாநில அரசு அப்புறப்படுத்தியுள்ளது. 
  • இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 4000 மரங்கள் சாய்ந்துள்ளன என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
வானிலை முன்னறிவாக்கம்:

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவாக்கம் (weather forecast) பின்வருமாறு:

 தேதி/நேரம் (இந்தியத் திட்ட நேரம்) இடம் (நிலகுறுக்குக்கோடு 
0N/ நிலநெடுங்கோடு 
0E)
 அதிகபட்ச நிலப்பரப்பு காற்றின் வேகம் (கிலோ/மணி) சுழல் காற்றின் வகை
 12-12-2016/2030  12.9/79.5  60-70 (80 வரை காற்றோட்டம்) சுழல்காற்றுப் புயல்
 12-12-2016/2330  12.9/79.1  50-60 (70 வரை காற்றோட்டம்) ஆழ்ந்த காற்றழுத்தம்
 13-12-2016/0530  12.8/78.3  35-45 (55 வரை காற்றோட்டம்) காற்றழுத்தம்


  • ஆந்திர மாநில தெற்குக் கடற்பகுதிகள், ராயலசீமா, வடக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அடுத்த 12 மணி நேரத்திற்கு மழைநீடிக்கும் என தெரிவித்துள்ளது.


உள்மாவட்டங்கள்:

டிசம்பர் 12, 2016 திங்கட்கிழமை மாலையில் இப்புயல் சென்னையைக் கடந்து உள்மாவட்டங்களை மையங்கொள்ளும். 

முந்தைய தென்னிந்தியப் புயல்கள்:
  • டிசம்பர் 2015 இல் சென்னையைக் கடந்த பெரும் புயலினால் சுமார் 70 பேர் உயிரிழந்தனர்.
  • டிசம்பர் 2011 இல் பாண்டிச்சேரியைக் கடந்த புயலினால் சுமார் 30 பேர் உயிரிழந்தனர்.
  • மே 2010 இல் ஆந்திர பிரதேச மாநிலம் முழுதும் ஏற்பட்ட புயலினால் 23 பேர் உயிரிழந்தனர்.
புயலின் பெயர்குறைவான அழுத்தம் (mbar)ஆண்டுகோப்பு
BOB 099981991
04B Nov 14 1991 0219Z.png
BOB 069941992
Cyclonic Storm BOB 06 on November 5, 1992.png
BOB 039681993
BOB 03 Dec 4 1993 0211Z.png
08B9671996
08B Dec 3 1996 0805Z.png
BOB 059582000
Tropical Cyclone 03B 28 nov 2000 0934Z.jpg
ஃபனூஷ்9982005
Fanoos 08 dec 2005 0756.jpg
நிஷா9962008
06B (Nisha) 26 November 2008 at 0525 UTC.jpg
ஜல்9882010
Severe Cyclonic Storm Jal 2010-11-07 0530Z.jpg
தானே9722011
Thane 2011 Dec 29 0735Z.jpg
நிலம்9922012
Nilam Oct 31, 2012 8.05(UTC).jpg
மதி9862013
Madi Dec 10 2013 0520Z.jpg
ரோனு9832016
Roanu 2016-05-21 0450Z.jpg
கியாண்ட்9972016
Kyant 2016-10-26 0500Z.jpg
நாடா10002016
BOB05 2016-11-29 0750Z.jpg