எதிர்பார்ப்புகளை உருவாக்கிய 'MXene' நானோசேர்மங்கள்

முனைவர் ஆர். சுரேஷ்
Mon Dec 12 2016 10:09:23 GMT-0000 (GMT)

சமீபத்தில் 'MXene' எனும் புதியவகை நானோசேர்மங்கள் கண்டறியப்பட்டுள்ளது. டிரெக்ஸில் பல்களைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இவைகள், இருபரிணாம உலோக கார்பைடுகள் அல்லது உலோக நைட்ரைடுகள் ஆகும்.


கோப்புப் படம்: விக்கிப்பீடியா

MXene என்ற பெயருக்கான காரணத்தை கீழ்கண்டவாறு விளக்கியுள்ளனர் இதனை கண்டறிந்த விஞ்ஞானிகள். எம் என்பது 'மெட்டல்' ஐ குறிக்கும். அதாவது உலோகத்தை குறிக்கிறது. பெரும்பாலும், டைட்டேனியம் (TI), வெனேடியம் (வி), குரோமியம் (CR), நியோபியம் (NB) முதலான உலோகங்களாக இருக்கலாம். எக்ஸ் என்பது கார்பன் அல்லது நைட்ர J ஜன் ஆகும். 'ஈன்' என்பது, கிரஃபினின் (கிராபெனின்) விகுதியை (-ene) குறிக்கிறது. இதற்கு காரணம் MXene னின் அமைப்பும கிரஃபினின் அமைப்பும் (ஒரு தாள் வடிவம்) ஒரே மாதிரி இருப்பது தான்.

ஒற்றை அடுக்கு MXene- கள் உலோக தன்மையை பெற்றுள்ளன. இதனால், இவைகளின் மின்கடத்து பண்பும் அதிகம். காந்த பண்பினை கொண்ட MXene- களும் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக MXene- கள் நீர்விரும்பும் தன்மை கொண்டவை. எனவே இவைகள் எளிதில் நீரில் கரைந்து, MXene நீர் கரைசலை தருகின்றன. MXene- களின் புறபரப்பில் வினைசெயல் தொகுதியினை மாற்றுவதன் மூலம், அவற்றின் இயற்பு பண்பினை மாற்ற இயலும். உதாரணமாக, ஆக்ஸிஜன் அல்லது ஃபுளிரின் தொகுதியினை MXene- களின் புறபரப்பில் கவருவதன் மூலம், அவைகள் உலோக தன்மையிலிருந்து குறைகடத்தி பண்பிற்கு மாற்றம் அடைகின்றன.

MXene- கள் லித்தியம் அயனி மின்கலனிலும் (பேட்டரி), மின்தேக்கியாகவும், ஒளிவினையூக்கியாகவும், கடத்து பூச்சுப்பொருளாகவும், இரசாயன வினையூக்கியாகவும், நீர் சுத்திகரிப்பு முறையிலும், எரிவாயு உணரியாகவும் (சென்சார்கள்) பயன்படுத்த முடியும் என்பதை சில ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தொடக்க நிலையில் உள்ள MXene- கள் பற்றிய ஆரய்ச்சி மென்மேலும் விரிவடைந்து பல புதிய மற்றும் பயனுள்ள பொருட்களை உருவாக்கிட இயலும் என்று நம்புகின்றனர் இத்துறையில் ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்.