நாசாவின் சனி ஆய்வுக்கோல் எடுத்த முதல் மேற்புறப் படிமம்

இராஜ்குமார்
Sun Dec 11 2016 12:28:59 GMT-0000 (GMT)

அமெரிக்காவின் மிகப் பெரிய விண்வெளி ஆய்வுக்கூடமான நாசாவின் சனி கோளுக்கு அனுப்பப்பட்ட ஆய்வுக்கோல், தற்போது அதன் சுற்றுவட்டப்பாதையில் சென்று சனியின் மேற்புறத்தைப் படம்பிடித்துள்ளது.சூரியக் குடும்பத்திலேயே மிகவும் அழகான கோள் என்று பெயர்பெற்ற சனிக் கோளின் அறுகோண வடிவ வளையம் மிகவும் ஆச்சரியமானதாக கருதப்படுகிறது. இந்த அறுகோண வளையத்தை வடக்கு அரைக்கோளத்தில் இருந்து நாசாவின் காசினி ஆய்வுக்கோல் (Cassini spacecraft) படம்பிடித்துள்ளது. சனிக் கோளின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து காசினிக் கோல் எடுத்த புகைப்படத்தின் படிமத்தைப் (கீழுள்ளவாறு) பூமியில் உள்ள நாசாவின் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பியுள்ளது.


Image Credit: NASA/JPL-Caltech/Space Science Institute

நாசா கடந்த நவம்பர் 30, 2016 அன்று ரிங்-கிரேஷிங் ஆர்பிட்ஸ் (Ring-Grazing Orbits) என்னும் திட்டத்தின் கீழ் காசினி ஆய்வுக்கோலை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.