தமிழ் கணிதம் : நவீன பின்ன எழுத்துக்கள் - பதிவு ௩

    இராஜ்குமார்

FRIDAY, 23 JULY 2010

தமிழ் கணிதங்களில் சுழியம் என்றே ஒன்று இல்லை என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . ௧௮ (18)ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் இதனை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் . நான் கண்ட வரையில் பல தமிழ் வலைகளில் ஒவ்வொரு கணித வாய்ப்பாடிலும் ஒவ்வொரு விதமாக கூறுகின்றனர் . இதனை தொடர்ந்து கவனித்து வருகிறேன் .பல தகவல்களை சேகரித்து வருகிறேன் . அதற்கிடையில் , நான் ஏற்க்கனவே சிந்தித்தனவற்றை பதிவிடுகிறேன் .சரி , நாம் கடந்த பதிவுகளில் படிநிலை கீழ் எண்களை கண்டோம் . இதே போன்று படிநிலை மேல் எண்கள் குறிப்பிடவேண்டும் . அதுதான் இன்று மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் . ஏனென்றால் , அதில் தான் கிலோ , மெகா , ஜிகா , டெட்ரா போன்ற பிரபல மேற்ப்பின்ன எண்கள் காணப்படுகின்றன . ஆனால் அதனை பற்றிய பதிவு என்னால் இப்பொழுது இயற்றமுடியாத நிலையில் உள்ளேன் . விரைவில் சமர்பிக்கிறேன் .

இந்த பதிவில் கீழ் பின்ன எண்களிலேயே வேறு வகையான பின்ன வரிசைகளை காண்போம் . இதில் பத்தில் ஒன்று , இருபதில் ஒன்று , முப்பதில் ஒன்று , நாற்பதில் ஒன்று என்று நீளும் எண் வரிசையை எவ்வாறு பெயரிடலாம் என்று காணலாம் . நான் முன்பே கூறியது படி , பத்தில் ஒன்றை இருமா என்றும் , இருபதில் ஒன்றைமா என்று பெயரிட்டு விடலாம் . முப்பதில் ஒன்றை எவ்வாறு பெயரிடுவது ? அட நாற்பதில் ஒன்றைக் கூட அரைமா எனலாம் . ஆனால் இது போன்ற முப்பதில் ஒன்று , ஐம்பதில் ஒன்று போன்றவற்றை எவ்வாறு பெயரிடுவது . இதற்கெல்லாம் மா என்ற சொல்லை மூலமாக கொண்டு பெயரிவதை விட இருமாவை மூலச்சொல்லாகக் கொண்டு பெயரிடுவது அருமை. அவ்வாறு காணலாம் .

பத்தில் ஒன்று - இருமா ------------------> ஒன்றிருமா 
இருபதில் ஒன்று - மா ---------------------> இரண்டிருமா 
முப்பதில் ஒன்று -----------------------------> மூன்றிருமா 
நாற்பதில் ஒன்று - அரைமா -----------> நாலிருமா
ஐம்பதில் ஒன்று ------------------------------> ஐந்திருமா 
அறுபதில் ஒன்று -----------------------------> ஆறிருமா
எழுபதில் ஒன்று ------------------------------> ஏழிருமா
எண்பதில் ஒன்று - காற்மா----------------> எட்டிருமா 
தொன்னூறில் ஒன்று -----------------------> ஒன்பதிருமா  
நூற்றில் ஒன்று - ஒருபடி இருமா ----> பதிற்றிருமா (பத்திருமா)

எவ்வளவு அருமையா இருக்கிறது பாருங்கள் நமது கணிதமுறை .எப்படி வேண்டுமானாலும் வளைந்துகொடுக்கும் . கணிதத்தை பாட்டாக படித்ததே நாம் தான் முதலில் .கோணம் வட்டம் போன்ற கணக்கை சங்க இலக்கியத்தில் உள்ளதாக வலை தளங்களில் கண்டிருக்கிறேன். எல்லாவற்றை ஒன்று திரட்டுவோம் .

குறிப்பு : நான் மேலே இருமாவை மூலச் சொல்லாக கொள்ள வேண்டினேன். ஆனால் இருமாவிற்கே மா தான் மூலம் என்பதையும் அறிக.

Comments

Popular posts from this blog

நவீன தமிழ் கணிதம் - பதிவு இரண்டு

நவீன தமிழ் கணிதம் - கணவியல் (Set Theory)

தமிழ் கணிதம்