தமிழில் தகவலின் புதிய அளவை

- இராஜ்குமார்

SATURDAY, 24 JULY 2010

ஒரு தகவல் அல்லது செய்தியை அளப்பதற்கு துகள் என்பதனை பிட் என்ற ஆங்கில அளவைக்கு நிரகராக பயன்படுத்தலாம் . துகள் என்பது அளவிட இயலாத ஒரு மிக நுண்ணிய ஒரு பொருள் ஆகும் . இது போன்று அளவை குறிப்பிட இயலாத நிலையில் ஒரு நுண்ணிய பொருளின் மீது அழைப்பு விடுக்கும் பொழுது துகள் என்று கூறலாம் . துகள் சில நேரங்களில் நுண்ணிய பொருளில் எந்த அளவினை வேண்டுமானாம் இருக்கலாம் . சிலநேரங்களில் மின்னிகளாவும் , சில நேரங்களில் மின்னணுவாகவும் இருக்கலாம் . துகள் என்ற சொல் பார்க்கும் பொழுதோ , அல்லது குறிப்பிடும் பொழுதோ அந்த பொருளின் அளவு அறியாமல் இருக்கும் நிலையில் அது ஏதோ ஒரு நுண்ணிய பொருள் என்று கருதும் நிலையில் பயன்படுத்தலாம் . இதனையே நுண்ணிய செய்தி அல்லது மின்தகவல் என்று அழைக்கப்படும் எண்களால் வரையறை செய்ய இயலாத ஒரு பொருளை குறிப்பிடவும் , அதன் பல்வேறு செயல்பாடுகளை கணிக்கவும் பயன்படுத்துகிறோம் .

ஆகவே இனி நாம் bit என்ற ஆங்கில தகவல் அளவையை துகள் என்று தமிழே அழைக்கலாம் . பின் எட்டு பிட்டுகள் ஒரு பைட் என்று கூறுவதை போன்று , நாம் எட்டு துகளை நாம் எந்துகள் (எண் துகள்) என்று அழைக்கலாம் . இதன் அடிப்படையில் தகவல்
வாய்ப்பாடை உருவாக்கினால் பின் வருமாறு இருக்கும் .

8 துகள் ----------------------------------------------------------> எந்துகள் 

1024 எந்துகள் -------------------------------------------------> பத்துபடி இரண்டு ( ஆயிர எந்துகள் )

1024 பத்துபடி இரண்டு (ஆயிர) எந்துகள் ----------> இருபதுபடி இரண்டு (பத்திலச்ச) எந்துகள் 

1024 இருபதுபடி இரண்டு (பத்திலச்ச) எந்துகள் -> முப்பதுபடி இரண்டு (நிகற்புத) எந்துகள் 

இவ்வாறு பார்த்தோமேயானால் ,

bit - துகள் 
byte - எந்துகள் 
kilo byte - ஆயிர எந்துகள் 
mega byte - பத்திலச்ச எந்துகள் 
giga byte - நிகற்புத எந்துகள் 

என்றவாறு நீட்டிக்கொண்டே செல்லலாம் . 

Comments

Popular posts from this blog

நவீன தமிழ் கணிதம் - பதிவு இரண்டு

நவீன தமிழ் கணிதம் - கணவியல் (Set Theory)

தமிழ் கணிதம்