தமிழ் கணித எண்ணியல் முறை

- இராஜ்குமார்

SATURDAY, 24 JULY 2010


இந்த பதிவில் மேல் நோக்கு எண்களை காணலாம் . அவைகளை பின்வருமாறு பட்டியல் இடலாம் . இதில் உள்ள தசம் , சதம் , சகத்திரம் போன்றவை அனைத்தும் வட மொழியாக இருக்கக் கூடும் .

பத்து - ----------------------------------------------------------------> deca
நூறு - ---------------------------------------------------------------> hecta
ஒருபடி ஆயிரம் - ஆயிரம் - ---------------------------------> kilo
இருபடி ஆயிரம் - பத்து லட்சம் - -------------------------> mega 
முப்படி ஆயிரம் - நிகற்புதம் --------------------------------> giga 
நாப்படி ஆயிரம் - கற்பம் - (இலட்சங்கோடி) -----------> tera
ஐம்படி ஆயிரம் - சங்கம் -------------------------------------> peta
அறுபடி ஆயிரம் - மத்தியம் -அற்தம்---------------------> exa
ஏழுபடி ஆயிரம் - -முக்கோடி ------------------------------> zetta 
எண்படி ஆயிரம் - அசந்தியம் ------------------------------> yotta

இதைக்கொண்டு நாம் தற்போதைக்கு , KB/s என்று ஆங்கிலத்தில் தரவு வேகத்தை கணக்கிடுவதனை , நொடிக்கு ஆயிர பைட்கள் என்று கணக்கிட முடியும் . நொடிக்கு இருபடி ஆயிர பைட்கள் அல்லது பத்து லட்ச பைட்கள் தரவு வேகம் என்றும் , நொடிக்கு முப்படி ஆயிர பைட்கள் அல்லது நிகற்புத பைட்கள் தரவு வேகம் என்றும் நாம் தரவின் வேகங்களை தமிழிலேயே குறிப்பிட முடியும் .

அதே போன்று ஒரு கோப்பின் தரவு அளவை குறிப்பிடுகையில் , 10 MB உள்ள ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நாம் தமிழில் 10 இருபடி ஆயிர பைட்கள் அல்லது பத்து லட்ச பைட்கள் என்று குறிப்பிடமுடியும் . மேலும் , தகவலின் அளவீடு பற்றிய மதிப்பும் சேர்க்க வேண்டும் . அதாவது தகவல் அளவை என்று ஒரு அளவை முறையை பயன்படுத்த வேண்டும் . அவை தமிழிலேயே இடம்பெற வேண்டும்.

Comments

Popular posts from this blog

நவீன தமிழ் கணிதம் - பதிவு இரண்டு

நவீன தமிழ் கணிதம் - கணவியல் (Set Theory)

தமிழ் கணிதம்