வந்துவிட்டது டெலிபதி.. அஞ்சும் அறிவியலாளர்கள்..!!

- கி. கோகுல கிருட்டிணன்

ஆகத்து 31, 2012    11:31  இந்தியத் திட்ட நேரம்

மனிதர்களின் மூளை ஒரு செய்தியை ஒரு இடத்தில இருந்து மற்ற இடத்துக்கு பரிமாறி கொள்ள நஐரோன் (Neuron) என்னும் தசையை பயன்படுத்துகிறது இவை நம் உடலில் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு சங்கிலி தொடர் போல இருக்கும். இதை தீவிரமாக ஆராய்ந்த ஒரு ஆய்வாளர்கள் கொண்ட குழு அந்த நஐரோன்கள் செய்தி பரிமாற்றம் செய்யும் பொழுது ஒரு விதமான ஒலி உண்டாகிறது அதை பதிவிறக்கம் செய்ய ஒரு சிறிய நுண்ணிய சிப்பை மனிதனின் மூளையலில் பொருத்தி , அவனுடைய அசைவு, நினைவு என்று அனைத்தையும் கணினியில் பதிவிறக்கம் செய்கின்றனர். பிறகு அவன் மூளையையும் கணினயும் கொண்டு அவன் நினைக்கும் அனைத்தையும் அவன் சொல்லாமலே அறிகின்றனர்.

இதில் அடுத்த கட்டமாக அந்த சிப் ஒரு குரங்கின் மூளைக்குள் செலுத்தப்பட்டது, பின்பு கணினியுடன் சேர்க்கப்பட்ட அதன் மூளையின் சமிக்கைகள் ஒரு இயந்திர கை போன்ற அமைப்புடன் இணைக்கப்பட்டது. இப்பொழது அறிவியலாளர்களின் எண்ணம் அந்த குரங்கு தன் மனதில் அதன் எதிரில் வைக்க பட்ட உணவை எடுத்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலே போதும். அதற்குண்டான சமிக்கைகள் கணினி மூலம் இந்த இயந்திர கையை நகர்த்தி அந்த உணவி எடுக்கும். ஆச்சர்யம்! அந்த குரங்கு தனது கை போல நினைத்து அந்த இயந்திர கையை பயன்படுத்தியது, அது மேலும் அந்த கையை நாவால் நக்கியும் மிச்சம் இருக்கும் உணவை தன் கைகளில் எப்படி சுத்தம் செய்யுமோ அதுபோல் சுத்தம் செய்து அடுத்த உணவை எடுத்தது..

இதின் அடுத்த கட்டமாக இன்னொரு அறிவியலாளர்களின் குழு நம் குரல் வலையில் இருக்கும் சில தசைகள் நம் என்னகளை பிரதிபலிக்கும், நீங்கள் பேச நினைப்பது மட்டும் இல்லாமல் மனதில் நினைக்கும் அணைத்து வார்த்தைகளையும் இவை பிரதிபலிக்கும் அந்த தசை நம் கழுத்து பகுதியில் இடது பக்கம் அமைந்து இருக்கிறது , அதை படிக்கும் ஒரு சிறிய சிப்பை வடிவமைத்து உள்ளனர். முன்னர் செய்த ஆய்வினில் ஒருவரின் மூளைக்குள் சிப்பை செலுத்த வேண்டும் அனால் இவர்கள் சிறிய பெல்ட் போல் கட்சி அளிக்கும் இந்த கருவியை கழுத்தில் கட்டி கொண்டால் போதும் நீங்கள் நினைப்பவை என்னவென்று கணினிக்கு தெரிவித்து விடும், இதை இவர்கள் ஊனமுற்றோர் பயன்படுத்தும் ஒரு வண்டியை அதில் அமர்ந்த ஒருவர் தன் கழுத்தில் பொருத்திய அந்த சிப் மூலம் கணினியுடன் தொடர்பு கொண்டு அந்த வண்டியை நகர்த்தி வெற்றி பெற்றிருகின்றனர்.

இப்பொழுது அறிவியலாளர்கள் அஞ்சுவது வரும்காலத்தில் அணைத்து மனிதர்களும் கட்டாயமாக இந்த சிப் பொருத்தபடலாம் , நாம் அனைவரும் கன்னியின் வாயிலாக செயல்படுவதால். மனிதருக்குள் மனிதரே தாக்க நேரிடும், இப்பொழது கணினியை ஹக்கர்ஸ் தாக்குவது போல் , பின்பு ஒருவரை மற்றவர் கட்டுபடுத்தலாம் , ஒருவருடன் ஒருவர் பேசாமலே பெசிகொல்வர் , பார்வையிலே அனைத்துயும் சாதிப்பார், அனைவருக்கும் நான் தான் கடவுள் என்ற எண்ணம் தோன்றும். ஒரு நாட்டின் ராணுவ வீரர் ஒருவரை தாக்கினால் அவரை வைத்து அணைத்து இராணுவத்தையும் அழுது விட நேரிடும். இது மனித குலத்திற்கு அறிவியல் என்ற பெயரில் கிடைத்த சாபமா ???
இது கட்டுக்குள் வருமா ?? இதை எப்படி சமாளிக்க போகிறார்கள் வருங்கால அறிவியலாளர்கள்.

Comments

Popular posts from this blog

நவீன தமிழ் கணிதம் - பதிவு இரண்டு

நவீன தமிழ் கணிதம் - கணவியல் (Set Theory)

தமிழ் கணிதம்