தமிழும் அறிவியலும்

(Tamil and Science)

- கி. கோகுல கிருட்டிணன் 

ஆகத்து 30, 2012    18:16  இந்தியத் திட்ட நேரம்

முன்னுரை 

நாம் இன்று பார்க்கும் பல அறிவியல் அதிசியங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழ் முன்னோர்கள் கண்டுவிட்டனர், அப்படி சில செய்திகளை நாம் இந்தத் தொகுப்பில் அலசி ஆராய்வோம்.

நம் தமிழரின் தற்காப்பு கலையான "வர்மக்கலை" இன்று மாபெரும் உருவம் எடுத்து சீனர்களால் "குங்- பு" என்றும் ஜப்பானியர்களால் " கரத்தே" என்றும் இன்னும் பல தற்காப்பு கலைகளாகவும் வளர்ந்து இருக்கிறது. சீனர்கள் மற்றும் ஜப்பானியர்களின் தற்காப்புக்கலையின் கடவுளாக கருதும் "போதிதர்மர்" என்னும் சோழ அரச குடும்பத்தை சார்ந்தவர் என்பது அனைவரும் அறிவர், இப்பொழுது அவர் குறிப்பிட்ட வர்மக்கலையில் முக்கியத்துவமாக கருதும் நோக்கு வர்மம் என்னும் கலை மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் இன்று அதை நாம் எங்கும் காணமுடியவில்லை. நோக்கு வர்மம் என்றவுடன் நம் மனதில் தோன்றும் சில கேள்விகள் இவை: 

நோக்கு வர்மம் உண்மை தானா ?

ஒருவரை கண்களால் பார்த்த மாத்திரத்திலே நம்மால் கட்டுபடுத்த முடியுமா ? என்பன. 

இதோ அதற்கான பதில்கள். நோக்கு வர்மம் உண்மையே. இதை உறுதி படுத்தும் வகையில் அமெரிக்க அரசாங்கம் தனது நாட்டில் "ஸ்டார்கேட் ப்ரஜெக்ட் " என்னும் ஒரு குழுமத்தை உருவாக்கியது. இந்த குழுமம் அமெரிக்க படை வீரர்களுக்கு தகுந்த அளவு தங்களது மன வலிமையால் எதிரிகளின் நடமாட்டம் குறித்து துப்புக் கொடுத்தனர். பின்பு அமெரிக்கா அந்தக் குழுமத்தைத் தடை செய்தது. ஆனாலும் அமெரிக்கா இன்றும் தனது சில ராணுவம் தொடர்பான தேடல்களுக்கு "ரிமோட் வீவிங்" எனப்படும் நோக்கு வர்மத்தின் ஒரு கலையை பயன்படுத்தி சில மிகப்பெரும் சர்வதேச தீவிரவாதிகளைப் பிடித்துள்ள செய்தி அம்பலமானது. இது தொடர்பாக, சில ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் முழு அலசல் செய்யப்பட்டு இருக்கிறது. நோக்கு வர்மத்தில் ஒருவரை கட்டுபடுத்தவும் , தொடர்பு கொண்டு பேசவும் முடியும் ஏன் அவருக்கு மரணத்தைக் கூட நேர வைக்கக்கூடும். நாம் சொல்லும் இந்த நோக்கு வர்மம் நல்ல பயிற்சியின் மூலம் அனைவராலும் பெறக் கூடியது. நம் முன்னோர்கள் கண்ட அந்த அபார கலையை நாம் கற்க முன்வர வேண்டும் அந்தக் கலை இன்று பல பரிமாணங்களை எடுத்திருந்தாலும், நம்மிடம் மட்டுமே முழுமையாக உள்ளது. அதை அழிக்காமல் காப்பது நம் தலையாய கடமை. 

Comments

Popular posts from this blog

நவீன தமிழ் கணிதம் - பதிவு இரண்டு

நவீன தமிழ் கணிதம் - கணவியல் (Set Theory)

தமிழ் கணிதம்