தமிழ் கணிதம் : நவீன பின்ன எழுத்துக்கள் - பதிவு ௨

- இராஜ்குமார்

FRIDAY, 23 JULY 2010

நவீன பின்ன எழுத்துக்கள் என்று தலைப்பில் முந்தைய பதிவில் குறிப்பிடுகையில் சிலவற்றைகுறிப்பிட மறந்தமைக்கு வருந்துகிறேன். தமிழ் சொற்களும், அதில் ஊரும் சிந்தனைகளும், எத்தகைய சூழலிற்கும் காலத்திற்கும் வளைந்து கொடுக்கும் படியாக உள்ளது. அதனால் நான் முந்தைய பதிவில் கூறியது போல் தான் பெயரிட வேண்டும் என்பது இல்லவே இல்லை. எவை எளிதாகவோ, கவர்ச்சியாகவோ இருந்து நம் மனதில் இடம் பெறுகிறதோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகையால் முன்பு கூறியது போல பின்ன வரிசைகளை ஒருபடி இருமா, இருபடி இருமா, முப்படி இருமா என்றும், இதனை ஓரடுக்கு இருமா, ஈரடுக்கு இருமா, மூவடுக்கு இருமா என்றும் பெயரிடலாம்.


மேலும் இருமா பின்ன வரிசைகளின் முற்கால வரிவடிவம் எப்படி இருந்தது என்பதை இங்கு அறிக. 
( The following is a short extract on the symbolic representation of Tamil Numerals and fractions, taken from the book "Iniyia Thamizh Ilakkanam" by Yogisri Cuddhanantha Bharathiyar, Kavitha Publications, 15 Masilamani Stareet, TNagar, Chennai-600 017, p. 201-204.)

இந்த தளத்தில் நம் முன்னோர்களின் பின்ன எழுத்துக்களும் வரிவடிவமும் எவ்வாறு இருக்கும் என்பதை காணாலாம். சரி இப்பொழுது நாம் நவீன பின்ன வரிசைகளில் எப்படி இந்த வரிவடிவங்களை பயன்படுத்தலாம் என்பதனையும் பார்க்கலாம் . இருமாவின் வரிவடிவம் முந்தைய பதிவில் பார்த்திருப்பீர்கள். அதனையும் அடுக்கு எண்களின் தமிழ் வரிவடிவத்தையும் சேர்த்து பின்வரும் அட்டவனையை தயாரித்து இருகிறேன்.

இந்த அட்டவணையின் பால், நவீன பின்ன வரிசைகை பற்றிய ஒரு தெளிவு பிறந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். அடுத்தப் பதிவில் தொடர எண்ணி முடிக்கிறேன் இந்நிலையிலேயே.

Comments

Popular posts from this blog

நவீன தமிழ் கணிதம் - பதிவு இரண்டு

நவீன தமிழ் கணிதம் - கணவியல் (Set Theory)

தமிழ் கணிதம்