தமிழ் கணிதம்

- இராஜ்குமார்

SUNDAY, 25 JULY 2010

இதில் கடந்த சில பதிவுகளில் நான் செய்த பிழைகளை சற்று திருத்தி முழுப்பட்டியல் தயாரிக்கலாம் என்று எண்ணியுள்ளேன் . அதனால் , முன்பு கூறிய அனைத்து எண் , எழுத்துகளிலும் , அடிக்கடி நான் பயன்படுத்திய ஒரு சொல் படி என்பது ஆகும் . அதனை மடங்கு என்ற சொல்லால் திருத்தி எழுத முனைகிறேன் . எனவே இனி நான் முன்பு கூறியுள்ள ஒருபடி இருமா என்ற என்னை ஒருமடங் கிருமா என்றும் , ஒருபடி ஆயிரம் என்ற எண் வரிசைகளை ஒருமடங் காயிரம் என்றும் மாறி வர முழு எனப் பட்டியலையும் பின்வருமாறு மாற்றியமைக்கிறேன்.

பத்து - ----------------------------------------------------------------> deca
நூறு - ---------------------------------------------------------------> hecta
ஒருமடங் காயிரம் - ஆயிரம் - ---------------------------------> kilo
இருமடங் காயிரம் - பத்து லட்சம் - -------------------------> mega 
மும்மடங் காயிரம் - நிகற்புதம் --------------------------------> giga 
நாமடங் காயிரம் - கற்பம் - (இலட்சங்கோடி) -----------> tera
ஐமடங் காயிரம் - சங்கம் -------------------------------------> peta
அறுமடங் காயிரம் - மத்தியம் ---------------------------------> exa
ஏழுமடங் காயிரம் - -முக்கோடி ------------------------------> zetta 
எண்மடங் காயிரம் - அசத்தியம் ------------------------------> yotta

1/10 - ஒருமடங் கிருமா
1/100 - இருமடங் கிருமா
1/1000 - மும்மடங் கிருமா 
1/10000 - நாமடங் கிருமா 
1/100000 - ஐமடங் கிருமா 
1/1000000 - அறுமடங் கிருமா 
1/10000000 - எழுமடங் கிருமா 
1/100000000 - எண்மடங் கிருமா 
1/1000000000 - தொண்மடங் கிருமா 
1/10000000000 - பதின்மடங் கிருமா 
1/100000000000 - பதினோருமடங் கிருமா 

பத்தில் ஒன்று - இருமா ------------------> ஒன்றிருமா 
இருபதில் ஒன்று - மா ---------------------> இரண்டிருமா 
முப்பதில் ஒன்று -----------------------------> மூன்றிருமா 
நாற்பதில் ஒன்று - அரைமா -----------> நாலிருமா
ஐம்பதில் ஒன்று ------------------------------> ஐந்திருமா 
அறுபதில் ஒன்று -----------------------------> ஆறிருமா
எழுபதில் ஒன்று ------------------------------> ஏழிருமா
எண்பதில் ஒன்று - காற்மா----------------> எட்டிருமா 
தொன்னூறில் ஒன்று -----------------------> ஒன்பதிருமா  
நூற்றில் ஒன்று - ஒருபடி இருமா ----> பதிற்றிருமா (பத்திருமா)

8 துகள் ---------------------------------> எந்துகள் 
1024 எந்துகள் -------------------------> பதின்மடங் கிரண்டு ( ஆயிர ) எந்துகள்
1024 பதின்மடங் கிரண்டு ( ஆயிர ) எந்துகள் ----------> இருபதின்மடங் கிரண்டு ( பத்திலச்ச ) எந்துகள் 
1024 இருபதின்மடங் கிரண்டு ( பத்திலச்ச ) எந்துகள் -> முப்பதின்மடங் கிரண்டு ( நிகற்புத ) எந்துகள் 

bit - துகள் 
byte - எந்துகள் 
kilo byte - ஆயிர எந்துகள் 
mega byte - பத்திலச்ச எந்துகள் 
giga byte - நிகற்புத எந்துகள் 

எல்லாவற்றையும் மாற்றங்கள் செய்து, ஒரே பக்கத்தில் கொண்டுவந்துள்ளேன். இவையெல்லாம் நான் எதற்கு செய்கிறேன் என்றால் நம் முன்னோர் இட்ட கணக்கிற்கும் , இப்பொழுது உள்ள கணக்கிருக்கும் ஒரு முடுச்சு போடத் தொடங்கவே. அப்படியே இடரையும் படுத்தினேன்.

Comments

Popular posts from this blog

நவீன தமிழ் கணிதம் - பதிவு இரண்டு

நவீன தமிழ் கணிதம் - கணவியல் (Set Theory)