வெருளி நோய் வகைகள்

  (Phobia Types) 

  இலக்குவனார் திருவள்ளுவன்

அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள் : ஒன்றைப்பற்றிய அச்சத்தினால் ஏற்படும் அச்ச நோய் பல வகைப்படும். ஒன்றின்மீதான கடும் அச்சம், அல்லது விருப்பமின்மை, அல்லது வெறுப்பு,போபியா(phobia) எனப்படுகிறது. ஒருவர் மீது, அல்லது ஒரு சூழல் பற்றி,அல்லது ஓர் அமைப்பு மீது, அல்லது அமைப்பினர், நாட்டினர், அவர்கள்தொடர்பானவை என்பனவற்றின் மீது, அல்லது இவை போன்றவற்றின்மீது, எவ்வகைப் பேரிடருக்கும் வாய்ப்பு இல்லாத பொழுதும் விடாப்பிடியானஅல்லது இயல்பிற்கு மீறிய அல்லது பகுத்தறிவிற்கு முரணான அச்சம் ஏற்படுவதையே இது குறிக்கின்றது. போபியா(phobia) என்றால் அளவிற்குமீறிய பேரச்சம் என அகராதிகள் குறிப்பிடுகின்றன. ஒற்றைக்கலைச்சொல்லாக அமையாமல் பொருள் விளக்கமாக அமைவதால் இச்சொல்லின் அடிப்படையிலான பிற கலைச்சொற்கள் நெடுந்தொடராக அமைந்து பயன்பாட்டுத் தன்மையை இழக்கின்றன. தமிழ்நெடுந்தொடர்களைவிட அயல்மொழியின் சுருக்கச் சொற்களே பயன்பாட்டில் நிலைத்து விடுகின்றன. எனவே, தமிழ் ஆர்வலர்கள் கூடத்தமிழ்க்கலைச் சொற்களைப் பயன்படுத்துவதில்லை என்னும் குற்றச்சாட்டைக் கூறுவதில் பயனின்றாகிறது. எனவே, சுருங்கிய செறிவான கலைச்சொற்களையே நாம் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்; புத்தாக்கம்புரிய வேண்டும்; பயன்படுத்த வேண்டும்.

 1. 666ஆம் எண்-வெருளி-Hexakosioihexekontahexaphobia
 2. அச்ச வெருளி-Fearaphobia
 3. அச்சச்சூழல்வெருளி-Counterphobia
 4. அசைவு வெருளி-Kinetophobia, Kinesophobia
 5. அடைதாழ் வெருளி-Cleithrophobia/Cleisiophobia
 6. அடைப்பிட வெருளி-Claustrophobia
 7. அண்ட வெருளி-Kosmikophobia
 8. அணுஆயுத வெருளி Nucleomituphobia
 9. அதள் வெருளி-Doraphobia
 10. அதிர்ச்சி வெருளி-Hormephobia
 11. அமர்வுவெருளி-Cathisophobia/ Kathisophobia/ Thaasophobia
 12. அமைதி வெருளி-Sedatephobia
 13. அயர்ச்சி வெருளி-Kopophobia
 14. அயலார் வெருளி-Xenophobia/Zenophobia
 15. அயலுறை இந்தியர்கள் வெருளி-Mikatikoindicaphobia 
 16. அயில்/ ஊசி வெருளி-Enetophobia
 17. அரசியலர் வெருளி-Politicophobia
 18. அலை வெருளி Cymophobia
 19. அலை பேசி வெருளி-Nomophobia (no-mobile-phone phobia)
 20. அவைக்கோ வெருளி-(போப் வெருளி)-Papaphobia
 21. அழிவுவெருளி-Atephobia
 22. அழுக்கு வெருளி-Automysophobia/Mysophobia
 23. அளறு வெருளி/ பாழ்வினையர் உலகு வெருளி/ நரக வெருளி- Hadephobia/Stygiophobia/Stigiophobia
 24. அறிவுவெருளி-Epistemophobia/Gnosiophobia
 25. அறுவைவெருளி-Ergasiophobia,
 26. அனைத்து வெருளி-Panophobia/Pantophobia/ Panphobia/ Omniphobia
 27. ஆங்கிலேய வெருளி-Anglophobia
 28. ஆடிப்பார்வைவெருளி-Eisoptrophobia
 29. ஆண் வெருளி-Androphobia/Arrhenphobia/Hominophobia
 30. ஆணுறுப்பு வெருளி-Phallophobia/Ithyphallophobia
 31. ஆலந்து வெருளி-Dutchphobia
 32. ஆவிகள் வெருளி-Pneumatiphobia
 33. ஆழ்பு வெருளி-Bathophobia
 34. இசுலாமியவெருளி-Islamophobia
 35. இசை வெருளி Melophobia/Musicophobia
 36. இடவயின் வெருளி-Levophobia
 37. இதள் வெருளி (பாதரச வெருளி)-Hydrargyophobia 
 38. இப்பி வெருளி/சிப்பி வெருளி-Ostraconophobia
 39. இரவுவெருளி-Noctiphobia
 40. இருண்மைவெருளி Nyctohylophobia/Achluophobia /Lygophobia/ Scotophobia
 41. இருநோக்கு வெருளி-Diplophobia
 42. இருபடிச் சமன்பாட்டு வெருளி-Quadrataphobia
 43. இரும்பு வெருளி-Ferrumphobia
 44. இருள் வெருளி-Achluophobia/Lygophobia/Nyctophobia/Scotophobia
 45. இரைச்சல் வெருளி-Acousticophobia
 46. இல்லவெருளி-Ecophobia
 47. இழப்பு வெருளி-Disposophobia
 48. இளந்தை வெருளி-Ephebiphobia
 49. இளம்பிள்ளைவாத வெருளி-Poliosophobia
 50. இறகு வெருளி-Pteronophobia
 51. இறைச்சி வெருளி-Carnophobia
 52. ஈரிட வாழ்வி வெருளி-Batrachophobia
 53. உடல்மண வெருளி- Bromidrosiphobia/Bromidrophobia
 54. உடையிலி வெருளி-Dishabiliophobia/Gymnophobia /Nudophobia
 55. உணவு வெருளி-Sitophobia
 56. உணவுஉரை வெருளி/ஊணுரை வெருளி-Deipnophobia
 57. உணவுவெருளி-Cibophobia/Sitophobia/Sitiophobia
 58. உயர வெருளி-Hypsiphobia
 59. உயர்நிலை வெருளி-Altophobia
 60. உயர்பு வெருளி-Acrophobia
 61. உயர்வெளிவெருளி-Aeroacrophobia
 62. உருசிய வெருளி-Russophobia
 63. உருத்திரிபு வெருளி-Dysmorphophobia
 64. உருமு வெருளி-Brontophobia
 65. உருவஆடி வெருளி-Catoptrophobia
 66. உறுப்பிழப்பு வெருளி-Apotemnophobia
 67. ஊர்தி வெருளி Ochophobia
 68. ஊர்வன வெருளி-Herpetophobia
 69. ஊன வெருளி-Dysmorphophobia
 70. எகலிய வெருளி-Hegelophobia
 71. எட்டாம்எண் வெருளி Octophobia
 72. எடை வெருளி Obesophobia/Pocrescophobia
 73. எண் வெருளி-Arithmophobia
 74. எண்கள்வெருளி Numerophobia 
 75. எந்திர வெருளி Mechanophobia
 76. எமிய வெருளி Eremophobi
 77. எரிமீன் வெருளி-Meteorophobia 
 78. எலிவெருளி-Musophobia/Murophobia/Suriphobia
 79. எழுத்து வெருளி-Graphophobia
 80. எழுத்து(க்கூட்டு)ப்பிழை வெருளி-Ortographobia
 81. எழுதுகை வெருளி-Scriptophobia
 82. எறும்புவெருளி-Myrmecophobia
 83. ஏரி வெருளி-Limnophobia
 84. ஐசுலாந்து வெருளி-Islandophobia
 85. ஐரோப்பியவெருளி-Europhobia
 86. ஒட்டுயிரி வெருளி-Parasitophobia
 87. ஒலி வெருளி/தொலைபேசி வெருளி-Phonophobia
 88. ஒளி வெருளி-Photo Phobia
 89. ஒளிர்வு வெருளி-Photoaugliaphobia
 90. ஒறுப்பு வெருளி- Rhabdophobia
 91. ஓடுநீர் வெருளி-Potamophobia
 92. கசிவுக்கனவு வெருளி-Oneirogmophobia
 93. கடப்புவெருளி-Agyrophobia/ Dromophobia
 94. கடமை தவறு வெருளி-Paralipophobia
 95. கடிகாரவெருளி-Chronomentrophobia
 96. கண் வெருளி-Ommetaphobia/Ommatophobia
 97. கண்ணாடி வெருளி-Hyelophobia/Hyalophobia/Nelophobia.
 98. கண்திறப்பு வெருளி-Optophobia
 99. கணிணி வெருளி-Cyberphobia/Logizomechanophobia
 100. கதிர்ப்பட வெருளி-Radiophobia
 101. கதிரொளிவெருளி-Heliophobia
 102. கரிசு வெருளி -Hamartophobia/Peccatophobia
 103. கருஞ்சிவப்பு வெருளி-Porphyrophobia
 104. கருதுபு வெருளி/கருத்து வெருளி-Allodoxaphobia/ Ideophobia .
 105. கருவண்ண வெருளி-Melanophobia
 106. கரையான்வெருளி-Isopterophobia
 107. கல்லறைவெருளி-Coimetrophobia
 108. கழி வெருளி-Polonophobia
 109. கழுது வெருளி-Demonophobia/Daemonophobia
 110. களவு வெருளி/திருட்டு வெருளி-Cleptophobia/Kleptophobia
 111. களிப்பு வெருளி-Cherophobia
 112. கனவு வெருளி-Oneirophobia
 113. கன்னியர் வெருளி-Parthenophobia
 114. காச நோய் வெருளி-Phthisiophobia/Tuberculophobia 
 115. காத்திருப்பு வெருளி-Macrophobia
 116. காதல் தீண்டல் வெருளி/காதல் வெருடல் வெருளி-Malaxophobia/ Sarmassophobia
 117. காதல் வெருளி-Philophobia
 118. காய் கனி வெருளி-Lachanophobia
 119. காய்ச்சல் வெருளி/ சுர வெருளி-Febriphobia/Fibriphobia/Fibriophobia/ Pyrexiophobia
 120. காலவெருளி-Chronophobia
 121. காளாம்பி/காளான் வெருளி-Mycophobia
 122. காற்று வெருளி-Aerophobia
 123. கானக வெருளி-Hylophobia
 124. கிரேக்கச்சொல் வெருளி-Hellenologophobia
 125. கிறித்துவர்வெருளி-Christianophobia
 126. கிறித்துவவெருளி-Christophobia
 127. கீறல் வெருளி-Amychophobia
 128. குடலியக்க வெருளி-Defecaloesiophobia
 129. குடிப்பு வெருளி-Dipsophobia
 130. குதநோய் வெருளி-Proctophobia/Rectophobia
 131. குதிப்புவெருளி-Catapedaphobia
 132. குதிரைவெருளி-Oicophobia
 133. குப்பை வெருளி-Rupophobia
 134. குமட்டல் வெருளி-Aeronausiphobia
 135. குரங்கு வெருளி-Monkeyphobia
 136. குருதி வெருளி-Haemophobia
 137. குருதி வெருளி-Hemophobia/Hematophobia
 138. குளிர்ச்சி வெருளி-Cheimaphobia/Cheimatophobia/Psychrophobia
 139. குறைபாட்டு வெருளி/நிறைவிலி வெருளி-Ordacleaphobia
 140. குறைபார்வை வெருளி/குருட்டு வெருளி-Scotomaphobia
 141. குனிவு வெருளி-Kyphophobia
 142. கூட்ட வெருளி-Ochlophobia/Demophobia/Enochlophobia
 143. கூர் வெருளி-Aichmophobia
 144. கூறாய்வு வெருளி-Testophobia
 145. கேலிவெருளி-Catagelophobia/Katagelophobia
 146. கை வெருளி-Chirophobia
 147. கையின்ப வெருளி-Meningitophobia
 148. கொடுக்கு வெருளி-Cnidophobia
 149. கொலம்பியவெருளி-Columbophobia
 150. கொழுப்பு வெருளி-Lipophobia
 151. கோட்பாட்டு வெருளி-Heresyphobia/Hereiophobia
 152. கோமாளி வெருளி-Coulrophobia
 153. கோழி வெருளி-Alektorophobia.
 154. சடங்கு வெருளி-Teleophobia
 155. சப்பானியவெருளி-Japanophobia/Nipponophobia
 156. சமநிலை வெருளி-Librophobia
 157. சமய வெருளி-Theophobia
 158. சமையல் வெருளி-Mageirocophobia
 159. சரடு வெருளி-Linonophobia
 160. சல வெருளி-Hydrophobia.
 161. சாத்தான் வெருளி-Satanophobia
 162. சாலை(ப்பயண) வெருளி-Hodophobia
 163. சாவு வெருளி -Necro Phobia/Thanato Phobia/ Thantophobia
 164. சிந்தை வெருளி/சிந்தனை வெருளி-Phronemophobia
 165. சிரங்கு வெருளி-Scabiophobia
 166. சிரிப்பு வெருளி/நகைப்பு வெருளி-Geliophobia
 167. சிலுவை வெருளி-Staurophobia
 168. சிவப்பு வெருளி-Erythro Phobia
 169. சிறுமை வெருளி-Microphobia/Mycrophobia
 170. சீனவெருளி-Chinophobia/Sinophobia
 171. சுடுகருவிவெருளி-Hoplophobia
 172. சுவை வெருளி-Geumaphobia/Geumophobia
 173. சுழற்சி வெருளி-Dinophobia
 174. சுற்றுகைவெருளி-Clithrophobia/Cleithrophobia
 175. சுறா வெருளி-Selachophobia
 176. சூறாவளி வெருளி-Lilapsophobia
 177. சூன்று வெருளி-Wiccaphobia
 178. செங்குத்துப் பாறை வெருளி-Cremnophobia
 179. செந்நிற வெருளி-Rhodophobia
 180. செம்மஞ்சள்வெருளி-Chrysophobia
 181. செய்யுள் வெருளி-Metrophobia
 182. செருமானியவெருளி-Germanophobia/ Teutophobia
 183. செல்வ வெருளி-Plutophobia
 184. செவ்வொளிவெருளி-Ereuthrophobia/Erythrophobia/Erytophobia
 185. சொத்து வெருளி-Orthophobia
 186. சொற்கள் வெருளி-Logophobia/Verbophobia
 187. தண்டனை வெருளி-Mastigophobia/Poinephobia
 188. தணுப்பு வெருளி-Pagophobia/Cryophobia
 189. தத்துவ வெருளி-Philosophobia
 190. தமிய வெருளி Autophobia
 191. தவளை வெருளி-Ranidaphobia
 192. தற்பால்உறவர் வெருளி-Lesbophobia
 193. தற்பாலுறவு வெருளி-Homophobia
 194. தனிமை வெருளி-Mono Phobia
 195. தனியர் வெருளி-Anuptaphobia
 196. தனியவர் வெருளி Isolophobia
 197. தனியை வெருளி Ermitophibia
 198. தாடி வெருளி-Pogonophobia/Pognophobia
 199. தாள் வெருளி /பாத வெருளி-Briophobia
 200. தாள் வெருளி-Papyrophobia
 201. திக்கல் வெருளி-Psellismophobia
 202. திணறல் வெருளி-Pnigophobia/Pnigerophobia
 203. திருட்டு வெருளி-Harpaxophobia
 204. திருமண வெருளி-Gamophobia
 205. திரைவு வெருளி-Rhytiphobia
 206. தீண்டல் வெருளி-Chiraptophobia எனப்பெறும்.
 207. தீண்டுகை வெருளி-Haptophobia/Haphephobia/ Haptephobia
 208. தீயமூச்சுவெருளி-Halitophobia
 209. தீயோர் வெருளி /கொள்ளையர் வெருளி-Scelerophibia
 210. தீர்வை வெருளி/முடிவெடு வெருளி-Decidophobia
 211. தீவுவெருளி-Insulaphobia
 212. துகள் (உள்ளிழு) வெருளி/கரித்துகள் வெருளி- Pnumono-microscopic-silico-volcano-coviosophobia
 213. துயில் வெருளி/ உறக்க வெருளி-Hypnophobia/Somniphobia
 214. துறவியர் வெருளி-Hierophobia
 215. தூசு வெருளி-Amathophobia/Koniophobia
 216. தூயநிலைவெருளி-Hagiophobia
 217. தேரை வெருளி-Bufonophobia
 218. தேவாலய வெருளி-Ecclesiophobia
 219. தேனீ வெருளி-Apiphobia/ Melissaphobia/ Melissophobia
 220. தொகு வெருளி-Editophobia
 221. தொடுகை வெருளி-Aphephobia/ Aphenphosmphobia
 222. தொழில் வெருளி-Ergo phobia
 223. தொழு நோய் வெருளி-Leprophobia/Lepraphobia
 224. தோல் நோய் வெருளி-Dermatosiophobia/Dermatophobia/ Dermatopathophobia
 225. தோற்காய வெருளி-Dermatophobia
 226. நஞ்சு வெருளி-Iophobia , Toxiphobia, Toxophobia, Toxicophobia
 227. நடுகல் வெருளி-Placophobia
 228. நடை வெருளி-Ambulophobia
 229. நலமிலி வெருளி-Panthophobia
 230. நற்செய்தி வெருளி-Euphobia
 231. நறுமண வெருளி/நறை வெருளி-Olfactophobia/Osmophobia, Osphresiophobia
 232. நனையா வெருளி-Superhydrophobia
 233. நாட்டியவெருளி-Choreophobia/ Chorophobia
 234. நாய் வெருளி-Cynophobia
 235. நாற்பால் வெருளி-Quadraphobia
 236. நிழல் வெருளி-Sciophobia/Sciaphobia
 237. நிற்பு வெருளி-Stasibasiphobia, Stasiphobia .
 238. நிறைஅறை வெருளி-Koinoniphobia
 239. நினைவிழப்பு வெருளி-Amnesiphobia
 240. நினைவுவெருளி-Mnemophobia
 241. நீக்கிரவர் வெருளி-Negrophobia
 242. நீதி வெருளி-Dikephobia
 243. நீர் வெருளி-Aquaphobia
 244. நீர்நாய் வெருளி-Lutraphobia
 245. நீர்ப்பத வெருளி-Hygrophobia
 246. நீராடல்வெருளி/குளியல்வெருளி-Ablutophobia
 247. நீரிழிவு வெருளி-Diabetophobia
 248. நீலவண்ண வெருளி-Cyanophobia
 249. நீள் புதுச்சொல் வெருளி-Macroxenoglossophobia
 250. நுதி வெருளி/மருந்தூசி வெருளி-Trypanophobia
 251. நுனை வெருளி-Belonephobia
 252. நூல் வெருளி/ புத்தக வெருளி-Bibliophobia
 253. நெஞ்சுநோய் வெருளி-Cardiophobia
 254. நெடுஞ்சொல் வெருளி-Hippopotomonstrosesquippedaliophobia/ Sesquipedalophobia
 255. நெருப்பு வெருளி-Pyrophobia/Arsonphobia
 256. நேர்ச்சி வெருளி-Dystychiphobia
 257. நோய் நுண்மி வெருளி-Bacillophobia, Microbiophobia, Bacteriophobia
 258. நோய் வெருளி-Nosophobia
 259. நோய் வெருளி-Pathophobia/Monopathophobia
 260. நோய்த் தொடர்பு வெருளி-Nosophobia
 261. நோய்வருவெருளி-Nosemaphobia
 262. நோவு வெருளி Algophobia/Agliophobia
 263. பகலொளி வெருளி-Phengophobia/Eosophobia
 264. பச்சைவெருளி-Chlorophobia
 265. பட்டாணி வெருளி-Arachibutyrophobia
 266. படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia
 267. படுக்கை வெருளி-Clinophobia
 268. பண வெருளி-Chrometophobia/Chrematophobia
 269. பதினகவையர்வெருளி-Ephebiphobia
 270. பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia
 271. பதின்மூன்றுடன் வெள்ளிவெருளி-Paraskavedekatriaphobia/Paraskevidekatriaphobia/Friggatriskaidekaphobia
 272. பயண வெருளி-Amaxophobia
 273. பயிர் வெருளி-Botanophobia
 274. பரிவெருளி-Equinophobia/Hippophobia
 275. பல்மருத்துவ வெருளி-Dentophobia/Odontophobia
 276. பவ்வீ வெருளி-Coprophobia Coprophobia/Scatophobia
 277. பழையன வெருளி-Retrophobia
 278. பள்ளி வெருளி-Didaskaleinophobia/Scolionophobia
 279. பறவை வெருளி-Ornithophobia
 280. பன்முக வெருளி-Polyphobia
 281. பனிமாசுவெருளி-Homichlophobia/Nebulaphobia
 282. பனிவெருளி-Chionophobia
 283. பாம்பு வெருளி-Ophidiophobia
 284. பால(ம்) வெருளி-Gephyrophobia/Gephysrophobia
 285. பால்நோய் வெருளி/மேகநோய் வெருளி-Luiphobia/Syphilophobia
 286. பால்வினாவெருளி-Erotophobia
 287. பாலுறவு வெருளி-Genophobia/Coitophobia
 288. பாவை வெருளி-Pupaphobia
 289. பாழ்வினை வெருளி–Enosiophobia/Enissophobia
 290. பிச்சைவெருளி-Hobophobia
 291. பிணைப்பு வெருளி-Merinthophobia
 292. பிரான்சு வெருளி-Francophobia/Gallophobia/Galiophobia
 293. பிழைத் தெரிவு வெருளி-Retterophobia 
 294. பிறப்புறுப்பு வெருளி-Kolpophobia
 295. பிறழ்பால் வெருளி-Paraphobia
 296. பின்வாய் வெருளி/மலக்குடல் வெருளி-Klismaphobia
 297. புகழ்ச்சி வெருளி-Doxophobia
 298. புகைமீன்வெருளி(வால்மீன்வெருளி)-Cometophobia
 299. புணர்ச்சி வெருளி-Coitophobia/Genophobia
 300. புது மருந்து வெருளி-Neopharmaphobia
 301. புதுமை வெருளி-Neophobia
 302. புதைவு வெருளி-Taphephobia
 303. புழு(த்தொற்று) வெருளி-Helminthophobia
 304. புழுக்கள் வெருளி-Scoleciphobia, Vermiphobia
 305. புளிப்பு வெருளி-Acerophobia
 306. புற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia
 307. புனைவுரை வெருளி-Mythophobia 
 308. பூச்சி வெருளி-Entomophobia/Insectophobia
 309. பூண்டு வெருளி-Alliumphobia
 310. பூனை வெருளி-Gatophobia/ailurophobia/galeophobia/Aelurophobia//Elurophobia/ Felinophobia
 311. பெண் வெருளி-Gynephobia/Gynophobia
 312. பெண்ணுறுப்புவெருளி-Eurotophobia
 313. பெயர் வெருளி-Onomatophobia/Nomatophobia
 314. பெயர்வு வெருளி-Tropophobia
 315. பெரும்பொருள் வெருளி-Megalophobia
 316. பொம்மை வெருளி-Pediophobia
 317. பேச்சு வெருளி-Glossophobia
 318. பேய் வெருளி-Phasmophobia/Spectrophobia
 319. பேயாட்ட வெருளி/அச்சுறுத்தல் வெருளி-Samhainophobia
 320. பேருரைவெருளி-Homilophobia.
 321. பேரொலி வெருளி-Ligyrophobia
 322. பேன் வெருளி-Pediculophobia/Phthiriophobia
 323. பொறிஊர்தி வெருளி-Motorphobia
 324. பொறுப்புவெருளி-Hypegiaphobia /Hypengyophobia
 325. போதைநீர் வெருளி-Methyphobia/Potophobia
 326. போர்த்துகல்வெருளி-Lusophobia
 327. போல்சுவிக்கர்வெருளி-Bolshephobia
 328. மகப்பேறு வெருளி/பிள்ளைப்பேறு வெருளி/பேறு கால வெருளி-Lockiophobia/ Maieusiophobia/Parturiphobia
 329. மகவு வெருளி-Kiddophobia
 330. மகார் வெருளி/குழந்தைகள் வெருளி-Pediphobia/Pedophobia
 331. மகிழ்ச்சி வெருளி-Hedonophobia
 332. மடல்வெருளி-Epistolophobia
 333. மணிக்கல் வெருளி-Crystallophobia
 334. மது வெருளி-Oenophobia
 335. மர வெருளி-Dendrophobia
 336. மரபு வெருளி-Patroiophobia
 337. மருத்துவமனை வெருளி-Nosocomephobia
 338. மருத்துவர்வெருளி-Latrophobia
 339. மருந்து வெருளி-Medication phobia/Pharmacophobia
 340. மருந்துச்சீட்டு வெருளி-Opiophobia
 341. மலச்சிக்கல் வெருளி-Coprastasophobia
 342. மழை வெருளி-Ombrophobia, Pluviophobia
 343. மறுபால்வெருளி-Heterophobia/Sexophobia
 344. மனநோய் வெருளி-Psychophobia/ Maniaphobia
 345. மனைப்பொருள் வெருளி-Oikophobia
 346. மாசு வெருளி/தூசு வெருளி/ நுண்மி வெருளி/ தொற்று வெருளி- Misophobia/Molysmophobia/Molysomophobia/Mysophobia/Verminophobia
 347. மாதவிடாய் வெருளி/மாதவிலக்கு வெருளி -Menophobia
 348. மாப்பொருள் வெருளி-Carbophobia
 349. மாமியார் வெருளி-Pentheraphobia.
 350. மாலைமாற்று வெருளி-Aibohphobia
 351. மாழை வெருளி-Metallophobia
 352. மாற்றவெருளி-Metathesiophobia
 353. மாற்றாந்தாய் வெருளி-Novercaphobia.
 354. மிகு குளிர் வெருளி-Frigophobia
 355. மிகைப்பணி வெருளி-Ponophobia
 356. மிதிவண்டி வெருளி-Cyclophobia
 357. மின்வெருளி-Electrophobia
 358. மீன்வெருளி-Ichthyophobia
 359. முகவாய் வெருளி-Geniophobia
 360. முகில்வெருளி-Nephophobia
 361. முட்டி வெருளி-Kneemaphobia
 362. முட்டிக்கால் வெருளி/முழங்கால் வெருளி-Genuphobia 
 363. முடி வெருளி/கூந்தல்வெருளி-Chaetophobia/Trichopathophobia/Trichophobia/ Hypertrichophobia
 364. முடிவிலிவெருளி-Apeirophobia
 365. முத்த வெருளி-Philemaphobia/Philematophobia
 366. முதியோர் வெருளி-Gerascophobia
 367. முதுமைவெருளி-Gerontophobia
 368. முயல் வெருளி-Leporiphobia
 369. முறைப்பு வெருளி/உற்று நோக்கு வெருளி-Scopophobia, Scoptophobia , Ophthalmophobia
 370. முன்னேற்ற வெருளி-Prosophobia
 371. மூக்கில்குருதிவடிதல் வெருளி-Epistaxiophobia 
 372. மூக்கு வெருளி-Rhinophobia
 373. மெலிவுவெருளி-Blennophobia/Myxophobia
 374. மேலுலக வெருளி-Ouranophobia/Uranophobia
 375. யூதர்வெருளி-Judeophobia
 376. வண்ண வெருளி/குரும வெருளி-Chromophobia/ Chromatophobia
 377. வண்ணத்துப்பூச்சி வெருளி-Mottephobia
 378. வம்பலர் வெருளி-Katikomindicaphobia
 379. வயிற்றுப்போக்கு வெருளி-Cholerophobia
 380. வலம்வயின் /வலப்பொருள் வெருளி-Dextrophobia
 381. வல்லுறவு வெருளி-Agraphobia
 382. வலி வெருளி-Odynophobia/Odynephobia
 383. வலிப்பு வெருளி Hylephobia .
 384. வழக்கு வெருளி-Liticaphobia
 385. வழு வெருளி-Rhypophobia
 386. வழுக்கை வெருளி-Phalacrophobia
 387. வழுக்கையர் வெருளி-Peladophobia
 388. வளிப்பை (பலூன்) வெருளி-Globophobia
 389. வறள்தோல் வெருளி-Pellagrophobia
 390. வறுமை வெருளி-Peniaphobia
 391. வனவிலங்கு வெருளி-Agrizoophobia
 392. வாந்தி வெருளி-Emetophobia
 393. வாலூன்வெருளி-Walloonphobia
 394. வாவல் வெருளி/வௌவால்வெருளி-Chiroptophobia
 395. வான் வெருளி /வானிலை வெருளி-Astraphobia/ Astrapophobia/ Keraunophobia/ tonitrophobia
 396. விடுதலைவெருளி-Eleutherophobia
 397. விலங்கு வெருளி-Zoophobia
 398. விலைமகள் வெருளி/ கணிகை வெருளி-Cypridophobia/ Cypriphobia/ Cyprianophobia/Cyprinophobia
 399. விழுங்கு வெருளி-Phagophobia
 400. விறைப்பிலி வெருளி-Medomalacuphobia
 401. விறைப்பு வெருளி-Medorthophobia
 402. வீட்டு வெருளி-Domatophobia/Eicophobia/Oikophobia
 403. வீடுதிரும்பல் வெருளி-Nostophobia.
 404. வீழ்பு வெருளி-Basophobia/Basiphobia
 405. வெகுள்பு வெருளி-Angrophobia
 406. வெண்ணிற வெருளி-Leukophobia
 407. வெருள் நோய் வெருளி-Phobophobia
 408. வெள்ள வெருளி-Antlophobia
 409. வெற்று வெளி வெருளி-Kenophobia
 410. வெறிநோய், மனநோய் வெருளி Lyssophobia
 411. வேதி வெருளி-Chemophobia 

Comments

Popular posts from this blog

நவீன தமிழ் கணிதம் - பதிவு இரண்டு

நவீன தமிழ் கணிதம் - கணவியல் (Set Theory)

தமிழ் கணிதம்