தமிழும் அறிவியலும் - 05

-   கி. கோகுல கிருட்டிணன் 


செப்டெம்பர் 3, 2012  15:23  இந்தியத் திட்ட நேரம்

ஹிக்ஸ் போசோன் உருவம் என்ன?

சிவனின் அளவை சொன்ன திருமூலர் சிவனின் வுருவதை சொல்லமல இருந்திருபார்??
சிவனாகிய ஆதிபிரானின் அளவை அவை சொன்னது இதோ 

மேவிய சிவன் வடிவது சொல்லிடில் 
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு 
மேவிய கூறது ஆயிரம் ஆயினால் 
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-திருமூலர்

அவ்வளவு சிறிய சிவனின் உருவம் எப்படி இருக்கும் என்று நமக்குள் ஒரு ஆர்வம் உண்டாகிறது அல்லவா, இதோ அவனின் உருவ அழகை சொல்லும் திருமூலரின் வார்த்தைகள் 

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான் 
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்  
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான் 
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே 
-திருமூலர் 

இதில் அவர் கூறியிருப்பது என்னவெனில் அனைத்திலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன், கண்ணனுக்கு தெரியாதவன் பரந்த சடையுடையவன் பசும்போன்னிரத்தில் இருப்பவன் , நினைபவர்கேல்லாம் கிடைக்காதவன் , அனைவரயும் மயக்கும் வெண்ணிலவானவானே. இது தான் அவர் சிவனின் வுருவாக சொல்கிறார். 

இதில் இப்பொழுது நாம் சில வரிகளை மீண்டும் ஆராய்ந்து பாப்போம்...

பொதுவாக சிவா பெருமானை நாம் சடாமுடியன் , சடையான் , என்று கூறுவோம் , அதே போல் அவரும் பரந்த சடையுடையவானே என்று கூறியிருக்கிறார், இப்பொழுது உங்கள் கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சிடியுடன் நினைத்து கொள்ளுங்கள், நாம் பேச்சு வழக்கில் பரட்டை தலை என்று சொல்லுவோம் அல்லவா அதைபோன்று, அனால் சற்று பெரிய அளவில் . 

பின்பு அந்த வுருவம் பொன்னிறத்தில் உள்ளது போல் நினைத்துகொள்ளுங்கள், இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம் வழக்கமாக காணும் சிவா பெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன் காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த வுருவத்தை கண்ணுக்கு புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள் . சாரா செரியாக ஒரு அனுவலவிற்கு 

இப்பொழுது சொல்லுங்கள் ஹிக்க்ஸ் போசோன் சொல்லும் அந்த ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் எப்படி இருக்கும் என்று......!!  
இணையதளத்திலும் தொலைகட்சிகளிலும் நாம் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதை கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டு முன்னரே. 

Comments

Popular posts from this blog

நவீன தமிழ் கணிதம் - பதிவு இரண்டு

நவீன தமிழ் கணிதம் - கணவியல் (Set Theory)

தமிழ் கணிதம்