தமிழும் அறிவியலும் - 03

கி. கோகுல கிருட்டிணன் 
செப்டெம்பர் 1, 2012 19:23 இந்தியத் திட்ட நேரம்

குமரி கண்டம் என்கின்ற நாவலன் தீவு- உலகம் தேடும் நிலபரப்பு....

குமரி கண்டம் என்றவுடன் நம் தமிழ்நாட்டை தான் அப்படி சொல்கின்றேன் என்று நினைத்து விட வேண்டாம் இங்கிருந்து செரியாக 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய தமிழ்நாடு எவ்வளவு பெரியது தெரியுமா ?? அங்குதான் மனித குலத்தின் முதல் உயிர் தோன்றியது. தமிழ்நாட்டில் தொடங்கி ஆஸ்திரேலியா, அந்தமான், இலங்கை ,மாலதீவு போன்ற அணைத்து நாடுகளும் சேர்ந்து இந்திய பெருங்கடலில் இப்பொழுது இறக்கும் ஆப்ரிக்கா போல கட்சி அளித்த மாபெரும் தீபகற்ப நாடு நம் தமிழ்நாடு. அவை அனைத்தும் இயற்கை கடல் சீற்றத்தினால் அழிந்து போயிற்ரு.
நவீன உலகம் அதை இன்று லெமுரியா (lemuria Continent) கண்டம் என்று அழைக்கிறது.
எப்படி சொல்கிறிர்கள் குமரி கண்டம் இருந்தது என்று கேள்வி தோனலாம் நம்முடைய காவியங்களில் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு தான் அனைத்தையும் படைதிருந்தார்கள் அதில் கிடைத்த சில அற்புத தகவல்கள் இதோ உங்களுக்காக

ஏழு தெங்கநாடு , ஏழு மதுரைநாடு , ஏழு முன்பலைநாடு , ஏழு பின்பலைநாடு, ஏழு குனகரை நாடு, ஏழு குன்ற நாடு , ஏழு குறும்பனை நாடு என்று மொத்தம் நாற்பத்திஒன்பது நாடுகளும், பறுளி , குமரி என்று இரண்டு பெரிய ஆறுகளும் , குமரிகோடு , மணிமலை என்று இரண்டு மலைதொடர்களும் இருந்துள்ளது. இது இல்லாமல் மூன்று பெரிய நகரங்கள் இருந்துள்ளது அவை தென்மதுரை , கபாடபுரம் , முத்தூர் என்பனவாம்...... இன்று உலகத்தால் பழமையானது என்று போற்றப்படும் சுமேரியன் நாகரிகம் வெறும் நான்காயிரம் வருடம் பழமையானதே , ஆனால் நக்கீரர் தன்னுடைய " இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ் சங்கங்கள் 9990 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக குறித்து இருக்கிறார்.

முதல் தமிழ் சங்கம் இன்று கடலுக்கு அடியில் இறக்கும் தென்மதுரை நகரத்தில் கி.மு 4440 ஆம் ஆண்டு 4449 புலவர்கள் கொண்டதாகவும் இவர்களுடன் சிவன், முருகன், அகத்தியர் உட்பட 39 மன்னர்கள் இணைந்து தொடங்கபட்டதம் அப்பொழுது அவர்கள் இயற்றிய நூல்கள்
1 .பரிபாடல்
2 .முதுநாரை
3 .முடுகுருக்கு
4 .கலரியவிரை
இந்த படைப்பில் அனைத்துமே அழிந்து விட்டது ...

இரண்டாம் தமிழ் சங்கம் கபாடபுரம் நகரில் கி.மு 3700 இல், 3700 புலவர்கள் சேர்ந்து அமைந்தது அதில் இயற்ற பட்ட நூல்கள்
1 . அகத்தியம்
2 . தொல்காப்பியம்
3 . பூதபுராணம்
4 . மாபுராணம்
இதில் தொல்காப்பியம் மட்டும் நமக்கு கிடைத்தது , மற்றவை அழிந்தது....

மூன்றாம் தமிழ் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு 1850 ஆம் வருடம் நடைபெற்றது இதில் இயற்றப்பட்ட நூல்கள்
1 . அகநானூறு
2 . புறநானூறு
3 . நாலடியார்
4 . திருக்குறள்
இதில் அனைத்துமே நம்மிடம் உள்ளது...

இவ்வளவு பழமை மிக்க நம் தமிழரின் கலாச்சாரத்தை மறந்து இன்று நாம் வேறு நாடு தேடி , மொழி மறந்து வாழலாமா...... நாம் வாழ்ந்து... நம் தமிழை வாழவைப்போம்
வாழ்க தமிழ்....!

Comments

Popular posts from this blog

நவீன தமிழ் கணிதம் - பதிவு இரண்டு

நவீன தமிழ் கணிதம் - கணவியல் (Set Theory)

தமிழ் கணிதம்