தமிழும் அறிவியலும் - 02

- கி. கோகுல கிருட்டிணன்

ஆகத்து 31, 2012    14:15  இந்தியத் திட்ட நேரம்

இப்பொழுது நாம் அலச போவது அணு ஆராய்ச்சி பற்றி.. அணு ஆராய்ச்சி பற்றி தமிழில் என்ன இருக்கிறது என்று குழப்பமா??
அதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒருவரை பற்றி அலசுவோம் , 
"திருமூலர்" அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் , பதிமூன்று சித்தர்களில் ஒருவருமான திருமூலர் வாழ்ந்த காலம் செரியாக பதிவு செய்யப்படவில்லை , எனினும் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் இவர் கி பி ஆறு முதல் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறுகின்றனர் , சரி இப்பொழுது இவர் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தவராகவே இருக்கட்டும், இவருடைய மிக பெரிய படைப்பு நம் தமிழுக்கு கிடைத்த மாபெரும் புதையல் "திருமந்திரம்" மூன்றாயிரம் செய்யுள் பாடல்களை கொண்ட அதில் பல மனிதவியல் ரகசியங்களையும் பிரபஞ்ச ரகசியங்களையும் அக்கு வேராக பிரித்து பொருள் தந்திருக்கிறார் , அப்படி என்ன சொல்லிவிட்டார் அவர் ..?? என்ற கேள்வி நமக்குள் எழும் இதோ அதன் முக்கிய தொகுப்பை இங்க தருகிறேன்.

அணுவின் அணுவினை ஆதிபிரானை 
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு 
அணுவின் அணுவினை அனுகவல்லற்கு
அணுவின் அணுவினை அணுகலுமமே 
- திருமூலர் 

இவர் அணு அணு என்று கூறுவது இன்றும் நாம் சொல்லும் அணு (Atom) தான். முதலில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சித்தருக்கு அணு என்று ஒன்று இருபது எப்படி தெரியும் ?? சரி இந்த செய்யுளின் உரைநடையை பார்போம் 

கண்ணனுக்கு தெரியாத அணு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது நமக்கு தெரியும் அந்த அணுவை ஆயிரமாக பிரித்தால் தான் "பரமாணு " என்னும் ஆதிபிரனை காண முடியும் என்கிறார். அந்த அற்புத சக்தியின் ஒளி ஆயிரம் கோடி சூரியனின் சக்திக்கு ஒப்பானதாக இருக்கும் என்கிறார். அந்த அற்புத சக்தியை சுழி முனையில் காணும் பொழுது , முற்றுபெற்ற முழுமையான் அறிவாகிய பேரறிவையும் , முழுமையான் அனுபவ இன்பமாகிய பேரின்பத்தையும், பெறுதற்கரிய பிறப்பான மானிடர் அனைவரும் பெற முடியும் என்கிறார் .

இப்பொழுது நம் ஆய்விற்கு வருவோம் அணு முதன் முதலாக உலகிற்கு அறிமுக படுத்தியவர் ஜான் டால்டன் என்பவர் 1803 ஆம் ஆண்டு , பின்பு 1897 ஆம் ஆண்டு தோம்ப்சன் அதில் உள்ள உட்பொருட்களை விலகினார். ஆகா 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்கள் அணுவை ஆராய போதிய வசதி இருந்திருக்க கூடும். அனால் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் எப்படி அதை பற்றி விவாதித்து இருக்கிறார்..? இதில் சுவாரசியம் என்னவென்றால் அவர் கூறியிருப்பது அணுவின் அணுவை . அணுவின் அணு எது என்பதை தான் இப்பொழுது உள்ள நவீன ஆய்வாளர்கள் தேடி கொண்டிருகிறார்கள் ஹிக்க்ஸ் போசோன்(Higgs Boson) என்ற பெயரில். அனால் திருமூலரோ அணுவின் அணுவை ஆயிரமாக பிரித்து அதில் வெளிப்படும் அற்புத ஒளியாகிய சக்தியை எவன் காண்கிறானோ அவனுக்கு தன் பிறப்பின் ரகசியமும் இந்த பிரபஞ்சத்தின் ரகசியமும் அறிவான் என்கிறார் . அதை தான் இப்பொழுது ஹிக்க்ஸ் போசோன் மூலம் ஆய்வாளர்கள் தேடி கொண்டிருகின்றனர். 

சரி இப்பொழது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க ஞானிகளாகிய தேமொச்ரிடுஸ் மற்றும் லேஉசிப்புஸ் (Democritus and Leucippus) அணுவை பற்றி விளக்கி இருகிறார்கள் அவர்கள் அதை எ-டோமொஸ் (a-tomos) என்று கூறி இருகிறார்கள். ஆகா 5 ஆம் நூற்றாண்டில் இவர்கள் தான் முதலில் சொல்லி இருகிறார்கள் என்றால் இல்லை. 

நம்முடைய அவ்வை பாட்டி 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர்கள் திருக்குறளை பாராட்டி ஒரு பாடல் பாடினார்

அணுவை பிளந்து.. ஆழ் கடலை புகட்டி 
குறுக தரித்த குறள்.
-அவ்வை 

அணு எவ்வளவு சிறியது என்பதை அறிந்த அவ்வை அணுவை பிளந்து அதனுள் ஆழ் கடலை புகட்டினால் அதில் எவ்வளவு சக்தியும் வலிமையும் இருக்குமோ அந்த அளவு சக்தி கொண்டது திருக்குறள் என்று அணுவுடன் ஒப்பிட்டு உள்ளார்... 
இதில் இருந்து நம் முன்னோர்கள் அறிவியல் ஞானத்தில் ஒளிவிளக்காக திகழ்ந்த காலம் இருந்திருகிறது. நாம் தான் அதை தொலைத்து விட்டு நம்முடைய பல அறிய புதையல்களை வெறும் காவியமாக பார்த்து பழகிவிட்டோம் அவை அனைத்தும் அறிவியல் சூத்திரங்களும், வான்வெளி ரகசியங்களும் அடங்கிய மாபெரும் படைப்பு அதை வெறும் பாடல்களாக படிக்காமல் அதன் உள்ள அர்த்தம் புரிந்து ஆராய்ந்தால் இன்னும் பல அதிசயங்களை காணலாம். 

Comments

Popular posts from this blog

நவீன தமிழ் கணிதம் - பதிவு இரண்டு

நவீன தமிழ் கணிதம் - கணவியல் (Set Theory)

தமிழ் கணிதம்